யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலயத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா புதன்கிழமை (24.03.2021) காலை இடம்பெற்றது. சைவஆச்சாரியார்களின் கிரியைகளையடுத்து வித்தியாலய அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் புதிதாக நிறுவப்பட்ட சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்தார். தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினரின் பங்களிப்பில் மேற்படி சிலை நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலைச் சமூகம் கலந்து சிறப்பித்தது.
புதன், 24 மார்ச், 2021
திங்கள், 22 பிப்ரவரி, 2021
மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு
யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார்.
வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நூல்களை வித்தியாலயம் சார்பில் ஆசிரியர்கள் சு.குணேஸ்வரன், துகாரதி ஞானச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களுக்கு வித்தியாலயம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
காட்சிப்படுத்தப்பட்ட நூல்களை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















