வியாழன், 28 மே, 2015

பாடசாலை மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு பாதணிகள் வழங்குதல்



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 30 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தில்இடம்பெற்றது. தொண்டைமானாற்றைச் சேர்ந்தவரும் வித்தியாலயத்தின் நலன்விரும்பிகளில் ஒருவருமாகிய திரு இ. சிவகுமார் அவர்கள் மேற்படி மாணவர்களுக்கான பாதணிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

நிகழ்வில் வித்தியாலய அதிபர், உபஅதிபர், ஆசிரியர் ஆகியோருடன் பாதணிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள்.



ஞாயிறு, 22 மார்ச், 2015

நூல்கள் அன்பளிப்பு


17.03.2015 இல் யாழ் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஒரு தொகுதி நூல்களை தோதென்ன வெளியீட்டு நிறுவனப் பணிப்பாளர் சிட்னி மர்கஸ் டயஸ் அன்பளிப்பு செய்துள்ளார். மேற்படி நூல்கள், சிங்கள நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சிறுவருக்கான கதைகள் மற்றும் சிறுகதைகள் என்பன அடங்கியுள்ளன. மேற்படி நிறுவனத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.