திங்கள், 16 நவம்பர், 2020

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன்

 


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சசிதரன் பவநிதன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார். வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற மாணவனை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குழாத்தினர் நேரில் வருகை தந்து பாரட்டினர். 

மேற்படி பாடசாலையில் இருந்து தோற்றியோரில் செல்வன் உதயகுமார் வருணிஜன் 164 புள்ளிகளையும் செல்வன் மகேஸ்வரன் தேனுஸ்ராஜ் 163 புள்ளிகளையும் பெற்றனர். மேற்படி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாரட்டி வாழ்த்துகின்றோம்.

 தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.




தமிழ்வலம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி





செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஞானம் ஞானசேகரனின் அன்பளிப்பு

 


கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் அவர்கள் தமது வெளியீடுகளின் ஒரு தொகுதியை பாடசாலை நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் தகவலை அண்மையில் முகநூல் வாயிலாகத் தெரியப்படுத்தியிருந்தார். அவ்வகையில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாகக வழங்கியுள்ளார். அந்நூற் தொகுதிகள் ஆசிரியர்களுக்கும்  மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியவை. ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.