கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் அவர்கள் தமது வெளியீடுகளின் ஒரு தொகுதியை பாடசாலை நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் தகவலை அண்மையில் முகநூல் வாயிலாகத் தெரியப்படுத்தியிருந்தார். அவ்வகையில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாகக வழங்கியுள்ளார். அந்நூற் தொகுதிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியவை. ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக