புதன், 20 ஜூன், 2018

உயர்தர மாணவர் ஒன்றுகூடலும் கலை ஊற்று சஞ்சிகை வெளியீடும்


    யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் 'கலை ஊற்று' சஞ்சிகை வெளியீடும் 16.06.2018 அன்று உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் இடம்பெற்றது.

    இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வித்தியாலய பழைய மாணவனும் ஆயுர்வேத வைத்தியருமாகிய Dr.சி. செல்வலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். அன்றையதினம் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 'கலை ஊற்று' (இதழ் 4) சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது. இதழ் பற்றிய உரையை யா சிதம்பரக் கல்லூரி ஆசிரியர் திரு இ. உதயசங்கர் (வதிரிவாசன்) நிகழ்த்தினார். அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பல பலரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் (2018)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக