வெள்ளி, 8 டிசம்பர், 2017

'நூல்விழி' வெளியீட்டிலிருந்து...தொண்டைமானாறு வீ. ம.வித்தியாலய நூலக வெளியீடாகிய நூல்விழி என்ற மலர்வெளியீடு 08.12.2017 அன்று வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புரையை வித்தியாலய வாசகர் வட்ட உறுப்பினர் செல்வி இ. சந்துஜா நிகழ்த்தினார்.
நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு சி. அகிலதாஸ் கலந்து சிறப்பித்தார். வாழ்த்துரையை ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி டொறின் மன்மதநாயகம் அவர்களும் வெளியீட்டுரையினை தமிழ்ப்பாடத்துக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் வலய நூலக இணைப்பாளருமாகிய திருமதி வளர்மதி அம்பிகைபாகனும் நிகழ்த்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி கல்பனா சந்திரசேகர் நூல் தொடர்பான உரையினை நிகழ்த்தினார். ஆசிரிய நூலகர் செல்வி செல்வரஞ்சினி செல்லத்துரை ஏற்புரையையும் திருமதி தேவகுமாரி யோகேந்திரன் நன்றியுரையினையும் நிகழ்த்தினர்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(படங்கள் நன்றி : ரூபரஞ்சன், வசந்தகுமார்,குணேஸ் )
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக