புதன், 3 ஜூன், 2015

வீ.ஆர் வடிவேற்கரசன் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா திறப்பு விழா



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 01.06.2015 அன்று சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்வு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது.

வித்தியாலய ஸ்தாபகர் வீரகத்திப்பிள்ளையின் பேரன் மறைந்த வீ. ஆர் வடிவேற்கரசன் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட மேற்படி பூங்காவின் திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு அ. சிறீகரன் அவர்களும், யாழ் வணிகர் சங்கத் தலைவர் திரு இ. ஜெயசேகரம் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆங்கில மொழித்துறைத் தலைவரும் விரிவுரையாளருமான திரு அ. இராசகுமாரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் வித்தியாலத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. வடிவேற்கரசனின் மகள் திருமதி திபாகரி சபேசன் அவர்கள் மேற்படி மாணவர்களுக்கான பாதணிகளை அன்பளிப்பாக வழங்கினார். அன்றையதினம் வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ரூபா ஐம்பதினாயிரம் பெறுமதியான நூல்களை யாழ் வணிகர் சங்கத் தலைவரும் வித்தியாலயத்தின் பழைய மாணவருமாகிய திரு இ. ஜெயசேகரம் அவர்கள் வழங்கிவைத்தார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.



































வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் வழங்கும் நிகழ்வு - யாழ் வணிகர் சங்கத் தலைவரும் வித்தியாலயத்தின் பழைய மாணவருமாகிய திரு இ. ஜெயசேகரம் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் நூல்கள்.(விருந்தினர்கள் இணைந்து நூலகப் பொறுப்பாசிரியரிடம் வழங்கும் நிகழ்வு) 


வித்தியாலத்தில் கல்வி கற்கும் 30 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. வடிவேற்கரசனின் மகள் திருமதி திபாகரி சபேசன் அவர்கள் மேற்படி மாணவர்களுக்கான பாதணிகளை அன்பளிப்பாக வழங்கினார்.







2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. பாடசாலையின் வளர்ச்சியைக் கண்டு பெரூமிதம் அடைகிறோம். தொடர்ந்து இதனை நன்றாக பராமரித்து மேம்படுத்துவதனால் தான் உரிய இலக்கை எட்ட முடியும்.

    பதிலளிநீக்கு