ஞாயிறு, 11 நவம்பர், 2018

வாசிப்பு மாதம் –பரிசளிப்பு நிகழ்ச்சி



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வாசிப்பு மாதப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சி 10.11.2018 சனிக்கிழமை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வடமராட்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் நூலக இணைப்பாளருமாகிய திரு து, ராமதாஸ் மற்றும் வசாவிளான் மத்திய கல்லூரி நூலக ஆசிரியரும் வளவாளருமாகிய திரு நி. பவானந்தசர்மா ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான அநுசரணையை திருமதி கமலாதேவி யோகநாதன் ஞாபகார்த்த நிதியத்தினரும் திரு திருமதி மதியழகன் தமிழ்ச்செல்வியும் வழங்கியிருந்தனர். நிகழ்ச்சியில் வித்தியாலய நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரிய நூலகர் திருமதி செல்வரஞ்சினி கெனடிநன்றியுரை நிகழ்த்தினார். மேற்படி நிகழ்ச்சியில் வாசிப்பு மாதத்தையொட்டி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளுக்குரிய பரிசளிப்பும் மாணவர்களின் பரிசில் பெற்ற ஆக்கங்களும் இடம்பெற்றன.

(ஒளிப்படங்கள்,நன்றி - இன்பன், றஞ்சன்)























சனி, 3 நவம்பர், 2018

பரிசளிப்பு விழா - 2018



   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 03.11.2018 அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற விழாவுக்கு முதன்மை விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்கள் கலந்து கொண்டார். விழாவுக்கு வீரகத்திப்பிள்ளையின் பேரன் இராஜசேகரம் தொண்டைமானாநாபன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். வித்தியாலய ஆசிரியர், கலாநிதி சு.குணேஸ்வரன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் வருடாந்த பரிசில்தின அறிக்கையைச் சமர்ப்பித்தார். பிரதி அதிபர் நா. ரவீந்திரன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 
   கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் இணை பாடவிதான செயற்பாடுகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
விழா நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்: 
(படங்கள் : குணேஸ், வசந்தன், சாந்தினி)