செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஊடகங்களில் - நூற்றாண்டு விழாச் செய்திகள்
 1.

அனைத்து துறையிலும் சாதனை மிக்க சமூகமாக வளர வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்

17.09.2012 - திங்கட்கிழமை

அனைத்து துறையிலும் சாதனை மிக்க சமூகமாக வளர வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (16) யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் வித்தியாலய கலையரங்கில் பாடசாலையில் அதிபர் சிறிநடராசா தலைமையில் நடைபெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், எமது பிரதேசத்தின் கலை கலாசார விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதுடன், எதிர்காலத்தில் அனைத்து துறையிலும், சாதனைமிக்க கழகமாக மாறி வளரவேண்டுமெனவும் அப்போது தான் எமது சாதனைகள் உச்சநிலையை அடையமுடியுமெனத் தெரிவித்தார்.

கடந்த கால அனுபவங்களை  கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவசக் கல்வியை தமது ஒவ்வொரு பிள்ளைகளும் பெறுவதை உறுதிசெய்து கொள்வதுடன் கல்வியின்மூலமே வளமான ஒரு சமுதாயத்தினை கட்டியெழுப்ப முடியுமெனவும், ஒரு கிராமத்தின் வளர்ச்சியென்பது கல்வியின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளதுடன்,  தென்பகுதியின் சுதந்திரம் தங்கமென்றால் வட பகுதியின்  ஒருபோதும் தகரமாக இருக்க முடியாது இதையே எமது தலைவர் அடிக்கடி சொல்லிவருவதுடன், எமது தமிழ் பேசும் மக்கள் இதுவரைபட்ட அனுபவங்களை விளங்கிக் கொண்டு நடைமுறைசாத்தியமான வழிமுறையில் எதிர்வரும் காலத்தில் பயனிக்க வேண்டும். அப்போதுதான் எமது பிள்ளைகளுக்கு எதிர்கால சந்ததியினருக்கு ஒர்வளமான எதிர்காலத்தை பெற்றுக் கொள்ள முnயுமெனத் தெரிவித்ததோடு, நாம் அரசாங்கத்தோடு பங்காளிக் கட்சியாக இருப்பதால் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எம்மக்களுக்கு ஆற்றிவருகின்றோம்.  இப்பாடசாலையின் மைதானத்தை திருத்துவதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வல்வெட்டித்துறை பிரதேச இணைப்பாளரும் வல்வெட்டித்துறை நகரசபை எதிர்கட்சித் தலைவருமாகிய தெய்வேந்திரம், மேலதிக கல்விப் பணிப்பாளர் உதயகுமார், பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் எஸ்.சிவலிங்கராசா, வடமராட்சி பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.புஸ்பலிங்கம், பிரதிக்கல்விப்பணிப்பாளர் யோ. ரவீந்திரன், மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.சர்வானந்தம், இலங்கை வங்கி முகாமையாளர் சி.சிறிகாந்தா, ஒய்வுபெற்ற உயர்கல்விப் பணிப்பாளர் இ.சிவப்பிரகாசம், உதவிக்கல்விப் பணிப்பாளர் மு.சிறிபதி,  வி.யோகதுரை, போருட்நிறுவன கணக்காளர் முருகதாஸ், ஆறுதல் நிறுவன தவிசாளர் டிவகலாலா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.epdpnews.com/news.php?id=17143&ln=tamil


2.
உதயன் நாளிதழ் 18.09.2012


3.
நூற்றாண்டு விழா சிறப்பு மலர் உதயன் 16.09.2012




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக