புதன், 6 டிசம்பர், 2017

எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் விளையாட்டுத்துறையில் தேசிய மட்டப்போட்டிகளில் பங்குபற்றியமை அறிந்து அவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு எழுத்தாள நண்பர்கள் இருவர் ஒரு தொகைப்பணத்தினை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

தேசிய மட்டப்போட்டிகளில் பங்குபற்றுவதற்குப் பொருத்தமான உயர்தரத்திலான பாதணிகளை பிள்ளைகளுக்கு வாங்குதவற்கு ரூபா பதினாறாயிரம் ரூபாவினை எழுத்தாளர் விமர்சகர் அ.யேசுராசா அவர்களும், இச்செய்தியறிந்து அமெரிக்காவில் வதியும் எழுத்தாளர் சித்தார்த்த சேகுவேரா என அறியப்படும் ரமணிதரனும் பதினையாயிரம் ரூபாவினையும் வழங்கியிருந்தனர்.

தேசியமட்டத்திலான மைலோ வெற்றிக்கிண்ணத்திற்கான அஞ்சலோட்டம் மற்றும் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டப்போட்டிகள் தொடர்பான படங்களையும் செய்திகளையும் சமூக வலைத்தளத்தினூடாக அறிந்தே இருவரும் தாமாக உதவியுள்ளனர்.

எழுத்தாளர் யேசுராசா அவர்களிடம் இருந்து வித்தியாலய ஆசிரியர் மா. செல்வரட்ணம் குறித்த பணத்தைப் பெற்று வித்தியாலய பிரதி அதிபர் நா. ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சி. வசந்தகுமார் ஆகியோரிடம் மாணவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.
எழுத்தாள நண்பர்கள் இருவருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்
நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள்.


அ.யேசுராசா தனது அன்பளிப்பு 16,000 ரூபாவினையும்  சித்தார்த்த சேகுவேராவினது அன்பளிப்பு15,000 ரூபாவினையும்  வித்தியாலய ஆசிரியர் மா. செல்வரட்ணத்திடம் கையளிக்கிறார். 

 அமெரிக்காவில் வதியும் எழுத்தாளர் சித்தார்த்த சேகுவேரா 

 ஆசிரியர் மா. செல்வரட்ணம் குறித்த பணத்தைப் பெற்று வித்தியாலய பிரதி அதிபர் நா. ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சி. வசந்தகுமார் ஆகியோரிடம் மாணவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.

 வித்தியாலயம் வெளியிட்ட உயர்தர மாணவர் மன்ற  'கலையூற்று' இதழினை அ.யேசுராசா அவர்களிடம் வழங்கும் 
வித்தியாலய ஆசிரியர் சு.குணேஸ்வரன். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக