சனி, 14 அக்டோபர், 2017

தேசியத்தில் பதக்கம் பெற்ற வீரர்கள் - முதற்சாதனை



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கு முதல்முதலில் தேசிய மட்டத்தில் (Beach Volleyball – Second runner up) பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த கந்தசாமி கவிசனன், ஜெயதுரை டிலக்சன் ஆகியோரைப் பாராட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரைக் கரப்பந்தில் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மூன்றாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நீர்கொழும்பு உல்லாசக்கடற்கரையில் இடம்பெற்ற ஆட்டத்தில் 21:11 21:23 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.


"மூன்றாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்தில் முதல் பதக்கத்தினை வெற்றிகொண்ட தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணியின் பொறுப்பாசிரியர் வசந்தகுமார் அவர்கள் ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும்பொழுது, “வரலாற்றிலேயே முதலாவது பதக்கத்தினை எமது கல்லூரி பெற்றிருக்கின்றது. மிகவும் மகிழ்வாக உணர்கின்றேன். வீரர்களினதும் பயிற்றுவிப்பாளர் மயூரனதும் கடின உழைப்பு இந்த வெற்றியினைப் பெற்றுத்தந்திருக்கின்றது” எனத் தெரிவித்தார்." -ThePapare.com

பாடசாலை வரலாற்றில் பதேசிய ரீதியில் பதக்கம் பெற்றமை முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.இதே வேளை பாடசாலையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்ற சிவன் பவுண்டேசன் நிறுவுனர் வேலாயுதம் கணேஸ்வரன் இணைப்பாளர் க.சதீஸ் உட்பட பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றார்கள் அறைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

நிகழ்வுகளில் இருந்து ஒரு பகுதி ஒளிப்படங்கள்.







பாராட்டுவிழாவில் இருந்து....



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக