திங்கள், 25 ஜூன், 2018

சின்னம் சூட்டும் நிகழ்ச்சி



யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்ச்சி (25.06.2018) வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்ச்சியில் சிவன் பவுண்டேசன் கணேஸ் வேலாயுதம் அவர்களும், வடமராட்சி ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் செல்வி து. பொன்னரசி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டினர். மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
(Photos :SK)
















புதன், 20 ஜூன், 2018

உயர்தர மாணவர் ஒன்றுகூடலும் கலை ஊற்று சஞ்சிகை வெளியீடும்


    யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் 'கலை ஊற்று' சஞ்சிகை வெளியீடும் 16.06.2018 அன்று உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் சி. நுசாருகேசன் தலைமையில் இடம்பெற்றது.

    இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வித்தியாலய பழைய மாணவனும் ஆயுர்வேத வைத்தியருமாகிய Dr.சி. செல்வலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். அன்றையதினம் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 'கலை ஊற்று' (இதழ் 4) சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது. இதழ் பற்றிய உரையை யா சிதம்பரக் கல்லூரி ஆசிரியர் திரு இ. உதயசங்கர் (வதிரிவாசன்) நிகழ்த்தினார். அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பல பலரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.






அதிபர், பிரதிஅதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் (2018)