வெள்ளி, 28 ஜூலை, 2017

சாதனை மாணவர்கள் கௌரவிப்பு



வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டு விழாவில் பங்குபற்றி தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகிய யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா அண்மையில் 21.07.2017 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. வடமராட்சி வலய உடற்கல்விப் பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு எஸ். செல்வக்குமாரன் மற்றும் வித்தியாலய சமூகத்தினர் கலந்து கொண்டு மாணவர்களைக் கௌரவித்தனர்.

கௌரவம் பெற்ற மாணவர்கள்.

1. செல்வி அருந்தவராசா சிந்துஜா 12 வயதுப் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 14.8 செக்கன்களில் ஓடி முடித்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டவர். அத்துடன் Track Champion வெற்றிக்கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டவர்.
2. செல்வன் உதயகுமார் சிந்துஜன் 14 வயதுப் பிரிவினருக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் நான்காம் நிலைபெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றவர்.(Colours)
3. பெண்களுக்கான 4 400 மீற்றர் போட்டியில் செல்விகள் நக்சாளினி, கலாஜினி, சாமந்தியா, சதீசனா, லவண்ஜா, ஆகியோர் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள்.
4. 800மீற்றர் ஓட்டத்தில் பங்கு பற்றிய வி.சாமந்தியா 5 இடத்தைப் பெற்றுள்ளார்.
5. 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய செல்வி எல் கலாஜினி ஐந்தாம் இடம்பெற்றுள்ளார்.
6. 12 வயது பெண்களுக்கான 4× 50 மீற்றர் அஞ்சல் ஓட்ட நிகழ்வில் நான்காம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள்.
7. 12 வயது ஆண்களுக்கான 4× 50 மீற்றர் அஞ்சல் ஓட்ட நிகழ்வில் ஆறாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள். (Colours)

Photos : Navaratnam Thuvaragan































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக